சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு
|அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், இன்று காலை முதலே #HBDRajinikanth என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.