கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
|குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருடைய உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருடைய உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராஜீவ்காந்தி பிறந்த நாள்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மனை அருகே ஈஞ்சக்கோட்டில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ் முன்னிலை வகித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொன்மனை பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி
வில்லுக்குறியில் நடந்த ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவுக்கு வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜோஸ், ஏசுதாசன், நாகேந்திரன், சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
குருந்தன்கோடு
குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவரும், கக்கோட்டுத்தலை பஞ்சாயத்து தலைவருமான ஜோசப்ஜெரால்டு கென்னடி தலைமை தாங்கி ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பேராசிரியர் சுந்தர்ராஜ், தலக்குளம் மூர்த்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வேர்கிளம்பி
வேர்கிளம்பியில் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமையில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ராஜீவ்காந்தி உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, காட்டாத்துறை ஊராட்சி துணைத்தலைவர் ஜெபதாஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர் ஜான் சேவியர், மாவட்ட செயலாளர் ஜான் இக்னேசியஸ், வட்டார துணைத்தலைவர் ஓஸ்டின் ஞான ஜெகன், வேர்கிளம்பி பேரூராட்சி துணைதலைவர் துரைராஜ் மனுவேல், காட்டாத்துறை காங்கிரஸ் தலைவர் டாம் டிக்சன், திருவட்டார் ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, செறுகோல் ஊராட்சி முன்னாள் தலைவர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.