தூத்துக்குடி
ராஜீவ்காந்தி பிறந்த நாள்
|திருச்செந்தூரில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி:
திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், நகர காங்கிரஸ் துணை தலைவர் விசுவநாதன், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயந்திநாதன், திருச்செந்தூர் நகர செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார், முன்னாள் வட்டார தலைவர் வெற்றிவேல், இளைஞர் காங்கிரஸ் சிவசெந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு பொருளாளர் கோபால், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபாகர், அந்தோணி, லிங்கம், ஆதித்தன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தங்கபுஷ்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* குலசேகரன்பட்டினத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் அகில இந்திய காங்கிரஸ் சார்பாக நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ரஹ்மத்துல்லா, நம்பி, கீதன், பாண்டியன், கொம்பையா, ஆமினா பீவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.