< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் திருச்செந்தூரில் இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்..!
|24 Sept 2022 8:44 AM IST
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர்,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் இவ்விழா நடைபெற்று வந்த நிலையில், இந்தமுறை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இன்று நடைபெறும் விழாவில் முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பல்வேறு நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் வண்ணம் உள்ளது.