திண்டுக்கல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
|திண்டுக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
பட்டாசு வெடித்து...
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பழனியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆர்.எப்.ரோடு பணிமனை அருகே உள்ள கொடிக்கம்பத்தில் சங்கம் சார்பில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க மத்திய நிர்வாகிகள், பழனி கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
உணவு பொட்டலங்கள்
தி.மு.க. சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வேடசந்தூர் பஸ்நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாரதிநகரில் உள்ள பார்வையற்றோர் சங்க அலுவலகத்துக்கு சென்று தி.மு.க.வினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் முன்னிலை வகித்தார்.
மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், ஒன்றியக்குழு உறுப்பினர் மருதபிள்ளை, மாவட்டக்குழு உறுப்பினர் கவிதாமுருகன் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகம் திறப்பு
இதேபோல் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழிகாட்டுதலின்படி, தொப்பம்பட்டி ஒன்றியம் கோரிக்கடவில் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராஜாமணி கட்சி கொடியை ஏற்றி வைத்து, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிகரசுதன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கதிர்வேல், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவிலில் சிறப்பு பூஜை
பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார் தலைமையில் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு இனிப்பு
வடமதுரை பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வடமதுரை தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதையொட்டி வடமதுரையில் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேரூர் துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளி, கவுன்சிலர்கள் சசிகுமார், கார்த்திகேயன், சவுந்தர்ராஜ், விஜயா, சுப்பிரமணி, நெசவாளர் அணி நிர்வாகி சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. மீனவர் அணி சார்பில், திண்டுக்கல் அனுமந்தநகரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி, தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் மாரிமுத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன் கலந்து கொண்டு முதியவர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கிளை நிர்வாகிகள் வேலு ஆசாரி, கண்ணன், பிரசாத்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.