< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா


சின்னசேலம்

சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மேல்நாரியப்பனூர் கிராமத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை தாங்கிய சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சத்தியமூர்த்தி கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மாவட்ட பிரதிநிதியும், ஒன்றிய கவுன்சிலருமான சுதாமணிகண்டன் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களோடு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் வரதன் நன்றி கூறினார். இதேபோல் பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் நதியா ராஜேஷ் தலைமையிலும், குதிரைச்சந்தல் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மணி வடமலை தலைமையிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க. சார்பில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலா, செல்லையா, அருண்ராஜ், நிர்வாகிகள் இளஞ்செழியன், சிவசங்கர், அய்யப்பன் ஆனந்தவேல், நரேஷ், ஐஸ்வர்யா, வடிவேல், கவுன்சிலர்கள் ஜெயந்தி மதியழகன், குமரவேல், மாலதி ராமலிங்கம், மனோபாலன், ரமேஷ் பாபு, சிவசங்கரி சந்திரகுமார், ஜெயலட்சுமி விஜயபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்