ராமநாதபுரம்
இரைதேட குவிந்துள்ள கருப்பு அரிவாள் மூக்கன்
|ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நீர்நிலைகளில் கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இரைதேட குவிந்து உள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நீர்நிலைகளில் கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இரைதேட குவிந்து உள்ளன.
பருவமழை
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் இன்று முதல் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஆர்.எஸ் மங்கலம், மங்கலம், சோழந்தூர், நாரல், கழனிக் குடி, ஆனந்தூர், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழை சீசன் தொடங்கி ஆர்.எஸ். மங்கலத்தை சுற்றி பல கிராமங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் மங்கலம் கிராமத்தில் உள்ள நீர் நிலையில் மழை நீர் அதிகஅளவில் தேங்கி உள்ளது.
நீர் காகம்
தேங்கி நிற்கும் இந்த மழை நீரில் இரை தேடுவதற்காக நூற்றுக்கணக்கான கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள் நீர் நிலையில் இரை தேடுவதற்காக குவிந்துள்ளன. வெள்ளை நிற கொக்கு, நாரைகள், நீர் காகம் உள்ளிட்ட பறவைகளும் இங்கு குவிந்துள்ளன.