< Back
மாநில செய்திகள்
வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
மாநில செய்திகள்

"வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது" - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
3 Sept 2022 1:36 AM IST

பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாயிகள், பறவைகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். பறவைகள் வருகை தருவதை தடுக்க வேண்டும் என்று கூறவில்லை எனவும், அதே சமயத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்