< Back
மாநில செய்திகள்
கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்..வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
மாநில செய்திகள்

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்..வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

தினத்தந்தி
|
29 Oct 2022 8:40 AM IST

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோவையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

கேரளா அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் கண்காணிப்பு நடந்து வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த கண்காணிப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்