< Back
மாநில செய்திகள்
வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

தினத்தந்தி
|
31 Jan 2023 12:15 AM IST

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கடந்த காலங்களை விட இந்தாண்டு கூடுதலாக சுமார் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கடந்த காலங்களை விட இந்தாண்டு கூடுதலாக சுமார் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பு பணி

திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள சீசன் காலங்களில் இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சுகளை பொாித்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தாயகம் திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த கால சீசன்களை விட இந்தாண்டு நல்ல மழை பொழிவு காரணமாக சீசன் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் இணைந்து இந்த சரணாலயத்தில் வந்துள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் சிவகங்கை வனக்கோட்ட சார்பில் இந்த பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு பணிக்கு மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் மலர்கண்டன் முன்னிலை வகித்தார்.

16 ஆயிரத்து 352 பறவைகள்

மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி, காரைக்குடி பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, யாதவர் கல்லூரி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பறவை வல்லுனர்கள், தன்னார்வலர்கள் வனப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுகுடிபட்டி கண்மாய், சிறிய கொள்ளுகுடிபட்டி கண்மாய், வேட்டங்குடி கண்மாய் மற்றும் மாவட்டத்தின் இதர இடங்களில் உள்ள 20 கண்மாய்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 58 வகையான இனங்களில் சுமார் 16 ஆயிரத்து 352 நீர்பறவை மற்றும் நிலப்பறவைகள் இங்கு வந்துள்ளது. மேலும் கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக 514 பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனர். கணக்கெடுப்பு பணியில் கல்லூரி பேராசிரியர் கோபிநாத் மற்றும் மணிவண்ணன், சிவக்குமார், ஆனந்தசெல்வி, பிரதீபா, ஜோனட்ராணி, ராமேஸ்வரன், செல்வகுமார், கார்த்திகேயன், நவநீதகிருஷ்ணன், நிவேதினிகோபால்சாமி உள்ளி்ட்ட தன்னார்வலர்கள், வன பணியாளர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர். கணக்கெடுப்பிற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சதாசிவம், மற்றும் வனப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்