சிவகங்கை
சிங்கம்புணரியில் கோவில் உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்கள்
|சிங்கம்புணரியில் கோவில் உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்கள் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் பூைஜ முடிந்து கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று கோவில் கதவை திறந்தவர் பாபா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில் அருகே உள்ள கட்டிடத்தின் 3-வது மாடி அலுவலக வாசலில் உண்டியல் இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போது உண்டியல் உடைக்கப்படாமல் இருந்தது. உண்டியலில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் அதை விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இ்ந்த ேகாவிலில் உண்டியல் திருட்டு இது 3-வது முறையாகும். இப்பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெறுவதால் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.