< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவிலில்ரூ.1.18 லட்சம் உண்டியல் காணிக்கை
|2 Sept 2023 1:15 AM IST
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 3 உண்டியல்களில் இருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. போச்சம்பள்ளி ஆய்வாளர் சத்யா, தக்கர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் சித்ரா ஆகியோரின் மேற்பார்வையில், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள், வங்கி ஊழியர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர். இதில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து, 734 ரூபாய் மற்றும், 0.500 மில்லி கிராம் தங்கமும், 240 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியை வீடியோவில் பதிவு செய்தனர். இதையொட்டி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.