< Back
மாநில செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில்ரூ.33 லட்சம் உண்டியல் காணிக்கை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில்ரூ.33 லட்சம் உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
31 Aug 2023 1:15 AM IST

ஓசூர்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள 12 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராஜா தலைமையில், செயல் அலுவலர்கள் சாமிதுரை, சின்னசாமி, சிவா அகியோர் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் சக்தி, பூவரசன், ராமமூர்த்தி, அண்ணாதுரை மற்றும் வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர் பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் மொத்தம் ரூ.33 லட்சத்து 5 ஆயிரத்து 63 காணிக்கை இருந்தது., மேலும் 4 கிராம் தங்கம் மற்றும் 90 கிராம் வெள்ளிப்பொருட்களும் உண்டியல்களில் இருந்தன.

மேலும் செய்திகள்