< Back
மாநில செய்திகள்
கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் பிரச்சினை முகநூலில் கருத்து பதிவிட்டதால் நடந்த மோதலில் 2 பேர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் பிரச்சினை முகநூலில் கருத்து பதிவிட்டதால் நடந்த மோதலில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
18 Jun 2023 6:41 PM IST

செல்லங்குப்பம் கிராமத்தில் கோவில் வழிபாடு தொடர்பாக முகநூலில் மோதிக்கொண்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேட்டவலம்

செல்லங்குப்பம் கிராமத்தில் கோவில் வழிபாடு தொடர்பாக முகநூலில் மோதிக்கொண்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாரியம்மன் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் வழிபடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 29) என்ற வாலிபர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடைக்கு சென்றார். அவரை மற்றொரு தரப்பைச் சேர்ந்த செந்தமிழ் (33), உத்தரகுமார் (30) ஆகிய இருவரும் வழிமறித்து தலையில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதேபோல் மற்றொரு தரப்பில் செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் கோவில் வழிபாடு தொடர்பாக தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவிற்கு எதிராக செந்தமிழ் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த பிரச்சினையில் செந்தமிைழயும் அவரது குடும்பத்தாரையும் தங்கராஜ் ஆபாசமாக முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த செந்தமிைழயும் அவரது நண்பர் உத்தரகுமாரையும் தங்கராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக தங்கராஜ், செந்தமிழ் ஆகிய இருவரும் வேட்டவலம் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், செந்தமிழன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த மோதல் தொடர்பான பிரச்சினையில் தலைமறைவான உத்தரகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதுகாப்பு

மோதல் தொடர்பாக செல்லங்குப்பம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்