< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
இருதரப்பு மீனவர்கள் சமாதான கூட்டம்
|4 July 2022 11:02 PM IST
பரங்கிப்பேட்டையில் இருதரப்பு மீனவர்கள் சமாதான கூட்டம்
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை சலங்ககார தெருவில் மீனவர்கள் இரு தரப்பாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் இருதரப்பு மீனவர்களிடையே சமாதான கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு விசைப்படகு பாதுகாப்பு சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சலங்ககார தெரு இரு தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று 32 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு சலங்ககார தெரு மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.