திருநெல்வேலி
இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
|களக்காடு அருகே இருதரப்பினர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலவடகரை பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (வயது 59). இவரது மகன் மாரியப்பனுக்கும், தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியைச் சேர்ந்த லட்சுமணன் (54) மகள் மாரியம்மாளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாளை பார்ப்பதற்காக லட்சுமணன், தனது மனைவி பிச்சம்மாள் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் வந்தார். அப்போது அவர்களுக்கும், ராமையா குடும்பத்தினருக்கும் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ராமையா, அவரது மனைவி பிரேமா, மகன் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சேர்ந்து லட்சுமணனை கட்டையால் தாக்கி, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுபோல் லட்சுமணன், பிச்சம்மாள், மகன்கள் கருத்தப்பாண்டி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சேர்ந்து ராமையாவை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்குஇருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே இருதரப்பினர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.