< Back
மாநில செய்திகள்
இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
18 Jun 2022 3:15 AM IST

திசையன்விளை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 27). கொத்தனாரான இவர் திசையன்விளை புளியடி தெருவில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டுமான பொருட்களை எடுத்து சென்றபோது, அங்குள்ள ராஜாவின் வீட்டில் உரசியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்டவர்கள் நம்பிராஜனை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்