< Back
மாநில செய்திகள்
இருதரப்பினர் மோதல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இருதரப்பினர் மோதல்

தினத்தந்தி
|
12 April 2023 2:18 AM IST

களக்காடு அருகே, இருதரப்பினர் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே, இருதரப்பினர் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

போலீசில் புகார்

களக்காடு அருகே உள்ள வடுவூர்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 58). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால்துரை மகன் ஏசுபால் ஜெயக்குமாருக்கும் (48) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

சம்பவத்தன்று காமராஜை, ஏசுபால் ஜெயக்குமார் அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக மாறியது.

மோதல்

ஏசுபால் ஜெயக்குமார், அவரது தம்பி கிறிஸ்டோபர் (45), கிறிஸ்டோபர் மனைவி டயானா (40), உறவினர்கள் ஜான்சிராணி (42), சுசிலா (52), ஏசுபால் ஜெயக்குமார் மகன் ஸ்டீபன் பால்ராஜ் (20) ஆகியோர் சேர்ந்து காமராஜையும், அவரது மகன் ராஜேசையும் (30) செங்கல் மற்றும் கம்பால் தாக்கினர்.

இதேபோல் ராஜேஷ், அவரது தம்பி பிரகாஷ் (27), ராஜேசின் மனைவி அனுஜா (26), காமராஜ் ஆகியோர் சேர்ந்து ஏசுபால் ஜெயக்குமாரை செங்கலால் தாக்கினர்.

3 பேர் காயம்

இந்த மோதலில் காயமடைந்த காமராஜ், ராஜேஷ், ஏசுபால் ஜெயக்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார், இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்