< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
இருதரப்பினர் மோதல்
|17 Jan 2023 12:53 AM IST
திருவாடானை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா நத்தக்கோட்டை காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30), பழனி (37). இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த இரண்டு குடும்பங்களையும் தவிர்த்து விட்டு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கல் விழா கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (22) மற்றும் சிலர் சேர்ந்து சரவணன், பழனி ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சரவணன் வீட்டிற்கு பொங்கல் விழாவிற்கு வந்திருந்த சி.கே. மங்களம் ஆனிமுத்து மகன் பாலமுருகன் (25) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாடானை போலீசார் பாண்டி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.