கள்ளக்குறிச்சி
இருதரப்பினர் மோதல்; 25 பேர் கைது
|இருதரப்பினர் மோதலில் 25 பேர் கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் அருகே உள்ள சிறுபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சரவணன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சலீம் மகன் சல்மான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரவணன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவரை மறித்து சல்மான் தாக்கி உள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் உருவாகி, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சல்மான் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சல்மான் உள்ளிட்ட 15 பேர் மீதும், சல்மானின் தாய் குருமாபி கொடுத்த புகாரின் பேரில் சேகர் உள்ளிட்ட 21 பேர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொத்தம் 25 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.