< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது
|26 May 2023 12:15 AM IST
உடன்குடியில் இருதரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெஞ்ஞானபுரம்:
உடன்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் உடன்குடி கந்தபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை கந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
பின்னர் சதீஷின் நண்பர்கள், கந்தபுரம் பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றனர். அப்போது அங்கு வந்த ரஞ்சித்குமார் உள்ளிட்டவர்கள் கிரிக்கெட் மட்டையால் சதீஷின் நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சதீஷ், சங்கர், காசிமுருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.