< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது
|26 Oct 2023 12:50 AM IST
மானூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானூர்:
மானூர் அருகே தென்கலம்புதூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் அப்பகுதியைச் பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது உறவினர்களுடன் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டார். அப்போது அந்த பெண்ணை ராமகிருஷ்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ராமகிருஷ்ணன் வீட்டின் கதவை சேதப்படுத்தினர். இதனை தடுக்க முயன்ற ராமகிருஷ்ணனின் மாமியார் கோமதியம்மாளையும் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணன் மற்றும் 17 வயதான 2 வாலிபர்கள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.