< Back
மாநில செய்திகள்
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
12 Aug 2022 11:28 PM IST

வாணியம்பாடியில் கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வாணியம்பாடியில் கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அரிவாள் வெட்டு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் தேச மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இருதரப்ப னரிடையே பேனர் வைப்பது மற்றும் நடனம் ஆடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சிலர் சேர்ந்து பா.ஜ.க. நகர இளைஞரணி பொதுச் செயலாளர் ஜனார்த்தனனை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனை தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்