< Back
மாநில செய்திகள்
தலைக்கவசத்துடன் இருசக்கர வாகன பேரணி
விருதுநகர்
மாநில செய்திகள்

தலைக்கவசத்துடன் இருசக்கர வாகன பேரணி

தினத்தந்தி
|
1 Feb 2023 12:26 AM IST

தலைக்கவசத்துடன் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.


விருதுநகரில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து 100 வக்கீல்கள், கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து விருதுநகர் வணிக வீதி வழியாக ெரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இந்த பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்த குமார் தொடங்கி வைத்தார். இதில் சார்பு நீதிபதி ராஜ்குமார், உரிமையியல் நீதிபதி சிந்துமதி, மாஜிஸ்திரேட் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்