< Back
மாநில செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாநில செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
17 Nov 2023 10:15 PM IST

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, பைக் வீலிங் செய்து இளைஞர்கள் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜோலார்பேட்டை - நாட்றம்பள்ளி சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பி, இளைஞர்கள் சிலர் பைக் சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டும் வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்