< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளாங்கண்ணி தேவாலயத்தில் பெரிய தேர்பவனி திருவிழா - கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
|8 Sept 2022 7:40 AM IST
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
நாகை,
கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்று நடைபெற்றது.
தேர்பவனியையொட்டி தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பேராலய முகப்பில் இருந்து உத்திரிய மாதா, அந்தோனியார் உள்பட சிறிய தேர்கள் முன்னே வர, அதற்கு பின்னால் பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா அன்னையின் தேரினை சுமந்து வந்தனர். அப்போது கொட்டும் மழையில் இருபுறமும் நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மாதா தேர் மீது மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.