< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
15 Sep 2022 6:45 PM GMT

அண்ணா பிறந்த நாளைெயாட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.


அண்ணா பிறந்த நாளைெயாட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை பிரிவு சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிவகங்கையி்ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

அதன்படி 13 வயதிற்குஉட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டருக்கும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டருக்கும், 15 வயதிற்குஉட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டருக்கும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டருக்கும், 17 வயதிற்குஉட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டருக்கும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டருக்கும் போட்டிகள் நடைபெற்றன.

பரிசு, சான்றிதழ்

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3000-ம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை நகரசபை தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராமநாதன், வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்குமார், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்