< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

மூங்கில்துறைப்பட்டில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைதலைவர் அஞ்சலைகோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செந்தில் வரவேற்றார். இதில் மாணவ-மாணவிகள் 190 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய்ஆனந்த், ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் துரைவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்