விருதுநகர்
மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
|மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஆனந்தகுமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 13,15, 17 ஆகிய 3 பிரிவு வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000, 3-வது பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.250 என மொத்தம் 60 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், 213 மாணவர்கள் 78 மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.