< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
நாடக மேடை கட்ட பூமிபூஜை
|15 July 2023 12:15 AM IST
நாடக மேடை கட்ட பூமிபூஜை நடந்தது
தேவகோட்டை:
தேவகோட்டை யூனியன் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் கிராமத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நாடகமேடை கட்ட பூமிபூஜை நடைபெற்றது. தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன் கலந்துகொண்டு பூமிபூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் செலவில் மயானக்கரைக்கு செல்ல போடப்பட்ட சிமெண்டு சாலையையும் திறந்து வைத்தார். விழாவில் உறுதிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணேசன், அ.தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட பிரிவு செயலாளர் ராஜேந்திரன், பில்டிங் காண்ட்ராக்டர் காமராஜ் மற்றும் கிராம பொதுமக்கள், கிளைச்செயலாளர் சாத்தையா, ஆட்டோ ஆறுமுகம், வக்கீல் வைரக்கண்ணன், சிதம்பரம், சுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.