< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையக்கட்டிடம் கட்ட பூமி பூஜை
|4 Oct 2023 11:35 PM IST
ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையக்கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
புகழூர் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஹைஸ்கூல்மேடு பகுதியில் 2023-2024-ம் நிதி ஆண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் அறிவு சார் மையம் கட்டுவதற்காக ரூ.1 கோடியே 82 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது.
புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு அறிவுசார் மைய கட்டுமான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். புகழூர் நகராட்சித் துணைத்தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்கொடி வரவேற்று பேசினார்.
இதில், நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.