< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ரூ.12 லட்சத்தில் புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை
|7 Oct 2023 12:27 AM IST
ரூ.12 லட்சத்தில் புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
குளித்தலை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், கே.பேட்டை ஊராட்சி பகுதியில் ரூ.5 லட்சத்தில் புதிய நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து மேற்கண்ட பணிகளை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், கே.பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.