காஞ்சிபுரம்
முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
|முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவரை தெரு பகுதியில் 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டிருந்த சிமெண்டு சாலை மிகுந்த சேதம் அடைந்து காணப்பட்டது. இது குறித்து அறிந்த முத்தியால்பேட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் கவரை தெரு பகுதியில் புதிதாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஒன்றிய குழு கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சிமெண்டு சாலை அமைக்க ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கவரை தெரு பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் கலந்துகொண்டு சாலை அமைக்க பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பி.சேகர், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும், கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.