வேலூர்
ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை
|ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
குடியாத்தம் ஒன்றியம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று புதிதாக ரேஷன் கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.14 லட்சம் ரூபாயை ஒதுக்கினார்.
இதனை தொடர்ந்து ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டுபூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி.மேகநாதன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எஸ். ரமேஷ்குமார், ஜி.பி.மூர்த்தி, கே.மோகன், பிரகாசம், ஜான்சன் உள்பட அ.தி.மு.க.மற்றும் புரடங்சி பாரதம்கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.