< Back
மாநில செய்திகள்
பொதுச்சாவடி கட்டிட பூமி பூஜை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பொதுச்சாவடி கட்டிட பூமி பூஜை

தினத்தந்தி
|
11 Nov 2022 12:15 AM IST

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பொதுச்சாவடி கட்டிட பூமி பூஜை நடந்தது.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தயம் ஊராட்சி, காளியப்பகவுண்டன்பட்டியில் பொதுச்சாவடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு ரூ.10 லட்சம் செலவில் பொதுச்சாவடி கட்டிடம் கட்டுவதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முடிவு செய்தார். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் சத்திய புவனா, ஒன்றிய குழு துணைத்தலைவர் பி.சி.தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகள்