< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை

தினத்தந்தி
|
30 Jun 2023 5:08 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெரு, நூலகர் தெரு, பணங்கோட்டூர் போன்ற இடங்களில் தலா ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு ரேஷன் கடைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் நகர மன்ற உறுப்பினர்கள் தேவி கோகுலகிருஷ்ணன், காயத்திரி சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்