< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலம் அமைக்க பூமிபூஜை
|31 May 2022 10:08 PM IST
கம்மம்பட்டி ஊராட்சியில் பாலம் அமைக்க பூமிபூஜை நடந்தது. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி ஊராட்சி பப்பிரெட்டியூர்- தொப்பூர் போலீஸ் குடியிருப்பு இடையே பெரும்பள்ளம் இடத்தில் ரூ.50 லட்சத்தில் பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த பணி தொடக்க நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலத்துக்கான பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பா.ம.க மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், முன்னாள் பா.ம.க மாவட்ட செயலாளர் பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், ராஜீவ்காந்தி மற்றும் பாலகிருஷ்ணன், வெங்கட்டாசலம், சக்தி, தம்பிதுரை, சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.