கிருஷ்ணகிரி
வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
|ஊத்தங்கரை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லாவி ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய், அனுமன்தீர்த்தம் அண்ணாநகர் பகுதியில் ரூ.6 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. மூன்றம்பட்டி ஊராட்சி ஓபகாவலசை கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை குழாய், சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது. இதேபோன்று கோவிந்தாபுரம் ஊராட்சி பால்காரன் கொட்டாய் பகுதியில் ரூ.3 லட்சத்தில் பைப்லைன், எக்கூர் ஊராட்சி சாமாட்சி கொட்டாய் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. கீழ்மத்தூர் ஊராட்சியில் ரூ.3 லட்சத்தில் பேவர் பிளாக் பணி, காரப்பட்டு ஊராட்சியில் வளத்தானூர் பகுதியில்ரூ. 8 லட்சத்தில் தார்சாலை, உப்பாரப்பட்டி ஊராட்சியில் ரூ.4.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான பூமி பூஜையை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வேடி (வடக்கு), வேங்கன் (தெற்கு), மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் ஆறுமுகம். முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அவைத்தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, தொகுதி செயலாளர் திருஞானம், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.