< Back
மாநில செய்திகள்
பூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
மாநில செய்திகள்

பூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

தினத்தந்தி
|
1 Sept 2024 11:20 AM IST

பூலித்தேவன் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்