< Back
மாநில செய்திகள்
போகி பண்டிகை: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை...!
மாநில செய்திகள்

போகி பண்டிகை: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை...!

தினத்தந்தி
|
7 Jan 2023 4:58 PM IST

போகி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

தாம்பரம்,

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் , ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இதற்காக இடம் தேர்வு செய்து பழைய பொருட்களை வாங்க தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நமது சுற்றுச்சூழலும், காற்றும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையும் ஆகும். எனவே, மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கி புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்