< Back
மாநில செய்திகள்
பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
மாநில செய்திகள்

பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்

தினத்தந்தி
|
4 Jun 2022 2:12 AM GMT

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரமாக விளங்குகிறது. தற்போது நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,795 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2,294 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 17.4 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அதே சமயம் அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்