ஈரோடு
பவானியில் பரபரப்புகள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் கைது
|பவானியில் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பவானி
பவானியில் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் கார்த்தி (வயது 27). இவர் பெருந்துறையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
கார்த்தியின் உறவுக்கார பெண்ணான மீனாதேவி (28) என்பவர் அதே பகுதியில் தனது 6 வயது மகளுடன் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மீனாதேவி தன்னுடைய கணவரை பிரிந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திக்கும், மீனாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார்கள். தனிமையிலும் இருந்துள்ளார்கள்.
கொதிக்கும் எண்ணெயை...
இதனிடையே வேறு ஒரு பெண்ணை கார்த்தி காதலித்ததாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்ததாகவும் மீனாதேவிக்கு தொியவந்தது. இதனால் கார்த்தி மீது மீனாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாதேவியின் வீட்டுக்கு காா்த்தி சென்று உள்ளார். அப்போது இது தொடர்பாக கார்த்தியிடம், மீனாதேவி கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் வீட்டில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது மீனாதேவி ஊற்றி உள்ளார்.
கைது
கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டதும் அவர் வலியால் அலறித்துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாதேவியை கைது செய்தனர்.
ஏமாற்றியதால் ஆத்திரம்
கைது செய்யப்பட்ட மீனாதேவி, போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 'தொடர்ந்து 3 ஆண்டுகளாக என்னுடன் வாழ்க்கை நடத்தி வந்த கார்த்தி, என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் முடிக்க நினைத்தார். இதனால் ஆத்திரம் ஏற்பட்டு அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டேன்,' என்றார்.
கைது செய்யப்பட்ட மீனாதேவி, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.