< Back
மாநில செய்திகள்
கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக பவானீஸ்வரி பொறுப்பேற்பு..!
மாநில செய்திகள்

கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக பவானீஸ்வரி பொறுப்பேற்பு..!

தினத்தந்தி
|
8 Aug 2023 3:54 PM IST

கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக பவானீஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை,

கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல அலுவலகம் கோவை ரேஸ்கோர்சில் உள்ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அவர் கடந்த வாரம் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மதியம் கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்