< Back
மாநில செய்திகள்
பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டி; திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி முதலிடம்
திருச்சி
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டி; திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி முதலிடம்

தினத்தந்தி
|
6 Oct 2023 1:00 AM IST

பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி முதலிடம் பிடித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான செஸ் போட்டி திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் 3 நாட்கள் நடந்தது. 6 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் போட்டியில் 28 கல்லூரிகளில் இருந்து 168 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் 11 புள்ளிகள் பெற்ற திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், தஞ்சை பூண்டி ஏ.வி.வி.எம். ஸ்ரீபுஷ்பம் கல்லூரி 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், திருச்சி தேசிய கல்லூரி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தன. மாணவர்கள் நவீன், சிவகணேஷ் ஜெயபிரகாஷ், ராம்கைலாஷ், அபினேஷ், ரிஷி, தினேஷ் கண்ணன் ஆகிய 6 பேரும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்