< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பரதநாட்டிய அரங்கேற்றம்
|11 March 2023 8:50 PM IST
வேடசந்தூரில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
வேடசந்தூரில், வடமதுரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சலங்கை பூஜை என்னும் தலைப்பிலான பரதநாட்டியம் பயின்ற மாணவிகளுக்கான அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பரதநாட்டியம் பயின்ற மாணவிகள், நளினத்துடன் ஆடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி. சாமிநாதன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், துணைத் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பரதநாட்டிய பயிற்சியாளர் விஷாலி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் அதிர்ஷ்ட்டா, சத்திய ரூபா, வர்ஷிதா, விகாஷினி உள்ளிட்ட 12 பேர் பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.