< Back
மாநில செய்திகள்
பாரத சாரண-சாரணியர் இயக்க மாநில செயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
மாநில செய்திகள்

பாரத சாரண-சாரணியர் இயக்க மாநில செயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

தினத்தந்தி
|
13 Jan 2024 1:20 AM IST

தமிழ்நாடு பாரத சாரண- சாரணியர் இயக்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு பாரத சாரண- சாரணியர் இயக்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

இதில் தொடக்கக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் மாநில செயலாளர் நரேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய அளவில் சாரண-சாரணியர்களுக்கான முகாம் 3 முதல் 4 நாட்களுக்கு வருகிற மே மாதம் 3-வது வாரத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. இந்த முகாமை சென்னையில் நடத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான வருடாந்திர திட்டத்துக்கு ஒப்புதலும், ஆலத்தூர் மற்றும் குன்னூரில் உள்ள மாநில முகாம் தளங்களை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்