< Back
மாநில செய்திகள்
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
6 July 2022 6:09 PM GMT

பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டி கட்டளை மேட்டு வாய்க்கால் தென்கரை பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகணபதி, பகவதி அம்மன், பாம்பலம்மன் ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதி கொண்டுள்ளன. தற்போது இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி காலை மங்கல இசை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் முதல், 2-ம், 3-ம், 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை ராஜகணபதி, பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜகணபதி, பகவதி அம்மன், பாம்பலம்மன் ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்