< Back
மாநில செய்திகள்
பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
10 Jun 2022 12:49 PM GMT

காஞ்சீபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் வணிகர் வீதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பணிகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 7-ந் தே தி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. காஞ்சீபுரம் சங்கரமடம் மகேஷ் ராஜப்ப சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை புனித நீர் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பரிவார தெய்வங்களான படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்