< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
27 April 2023 12:05 AM IST

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை விளைந்தவுடன் பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கு விற்றது ரூ.4,500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4500-க்கு விற்றது ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்றது ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் செய்திகள்