< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
|28 Jun 2023 6:13 PM IST
ஆற்காடு போலீஸ் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டது.
2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த 27-ந் தேதி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கான கேடயத்தை வழங்கினார். அதனை ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர், சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் பெற்ற ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய அதிகாரியையும், காவலர்களையும் பாராட்டினார்கள்.